டாப் ஹீரோயினிகளுக்கு டப் கொடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்…. வேற லெவலில் ஒர்கவுட் செய்யும் வீடியோ இதோ…..!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ஏழு வருடங்களுக்கு முன்பே காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த கனா திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

தற்போது இவர் டிரைவர் ஜமுனா என்ற திரைப்படத்தில் கால் டாக்ஸி டிரைவராக நடித்து வருகின்றார். அதோடு ஒரு சில படங்களிலும் இவர் கமிட் ஆகியுள்ளார். இதனிடையே ஐஸ்வர்யா ராஜேஷ் விடுமுறைக்காக பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்று இருக்கிறார்.

அங்கு ஈபில் டவர் முன்பு எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை அவர் அண்மையில் இணையத்தில் பகிர்ந்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக பலம் வரும் இவர் தமிழில் மோகன் தாஸ், புலி மாடா, தி கிரேட் இந்தியன் கிச்சன் மற்றும் துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.இந்நிலையில் இவர் தீவிரமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.