தமிழ் சினிமாவில் 90களில் பலரில் உள்ளங்களையும் கவர்ந்து தனது நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. அவரின் திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்தாலும் சமீப காலமாக அவர் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதன்படி அவர் இறுதியாக ரஜினி நடிப்பில் வெளியாகி இருந்த அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது அவர் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். பத்து வருடங்களுக்கு மேல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு மகள் ஒருவர் உள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜூன் எட்டாம் தேதி மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென உயிரிழந்தார். அவரின் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அவரது மரணத்திற்கான காரணம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல வதந்திகள் பரவி வருகின்றன. இதனிடையே மீனா அறிக்கை வெளியிட்டு வதந்தி பரப்பாதீர் என கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் நேற்று உலக உடல் உறுப்பு தானம் தினத்தின் காரணமாக நடிகை மீனா உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனது கணவருக்கு உறுப்பு தானம் செய்ய donor’s யாராவது கிடைத்திருந்தால் கட்டாயம் காப்பாற்றி இருக்கலாம்.அப்படி நடந்திருந்தால் என் வாழ்க்கையே இன்று மாறி இருக்கும். உடல் உறுப்பு தானம் செய்வதன் மூலம் எட்டு உயிர்களை காப்பாற்ற முடியும்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
உயிரை காப்பாற்றுவதை விட பெரிய நன்மை எதுவும் கிடையாது. அதன் முக்கியத்துவத்தை உணர்ந்த நான் என் உடல் உறுப்புகளை தானம் செய்ய உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன் என்று மீனா பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.