பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரபலமானவள் தான் நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் முதலில் மிமிக்ரி கலைஞராக அறிமுகமாகி பின்னர் காமெடியனாக உயர்ந்தவர்.

59 வயதாகும் இவர் புது டெல்லியில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டு ஜிம்மில் கீழே சரிந்து விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

மருத்துவமனையில் அனுமதித்த பிறகு அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

ஆஞ்சியோ சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு அவரின் உடல் ஒத்துழைக்கின்றதுஎன்று மருத்துவர்கள் கூறிய நிலையில் அவர் தற்போது வரை சுயநினைவின்றி இருப்பதாகவும் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
இருந்தாலும் அவரின் உடல்நிலை முன்பு இருந்ததை விட தற்போது கவலைக்கிடமாக உள்ளதாம். இந்த தகவல் அவரது ரசிகர்கள் மற்றும் திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பலரும் வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.