தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராக திகழ்ந்த சரத்குமாரின் மகள் தான் வரலட்சுமி. சரத்குமாருக்கும் அவருடைய முதல் மனைவி சாயாவிற்கும் பிறந்த மூத்த மகள் வரலட்சுமி. இவர் முதல் முதலாக போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து சண்டைக்கோழி மற்றும் சர்க்கார் உள்ளிட்ட படங்களின் வில்லியாக களமிறங்க அந்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா உள்ளிட்ட பல்வேறு படங்களில் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான இரவின் நிழல் மற்றும் பொய்க்கால் குதிரை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்று தந்தன.

அதனால் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகின்றார். இந்நிலையில் இவர் முதல் முதலாக தனது தங்கையின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து உள்ளார்.

நடிகர் சரத்குமார் மற்றும் முதல் மனைவி சாயாவிற்கு பிறந்த மூத்த மகள் வரலட்சுமி, இளைய மகள் பூஜா. வரலட்சுமி சரத்குமார் தனது தாய் சாயா மற்றும் தனது தங்கை பூஜா சரத்குமார் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் வரலட்சுமிக்கு நிகராக ஹீரோயினி போல தோற்றமளிக்கிறார் அவரின் தங்கை. இவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்களும் திரைப்படத்தில் நடிக்கலாமே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.