தமிழ் சினிமாவில் இன்றும் முன்னணி நடிகராக வலம் வருபவர் என்றால் அவர் ரஜினி தான்.சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் இவர் நடித்துள்ள பெரும்பாலான படங்கள் ஹிட் கொடுத்துள்ளனர். அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர். இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அவருக்கு வயதானாலும் அவரின் நடிப்பிற்கு இன்னும் வயதாகவில்லை.

இந்நிலையில் அண்ணாத்து திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினி இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் இணைந்துள்ளார். இந்த திரைப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன்,கே எஸ் ரவிக்குமார் போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயிலர் படத்தின் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகியுள்ள நிலையிலும் படப்பிடிப்பு தொடங்காமல் இருப்பதாக ரசிகர்கள் கவலை தெரிவித்தனர். தற்போது ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை ரஜினியும் உறுதிப்படுத்தி உள்ளார்.

இந்நிலையில் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கப் போகும் நடிகை யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடிக்க உள்ளாராம். தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வளம் வரும் தமன்னா முதல் முறையாக ரஜினியுடன் ஜோடி சேருகிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதால் படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
Big buzz in #Superstar @rajinikanth ‘s @Nelsondilpkumar directed #Jailer @tamannaahspeaks plays the female lead! pic.twitter.com/HCzlgR4D0R
— Sreedhar Pillai (@sri50) August 13, 2022