சென்னைக்கு வந்த விஜய் தேவரகொண்டா…. டிடி-க்கு விழுந்த பலத்த அடி….. வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…..!!!!

கோலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் தேவர் கொண்டா. இவர் 2011 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான நுவ்விலா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இருந்தாலும் அவருக்கு வெற்றி வாய்ப்பை தேடிக் கொடுத்த படம் அர்ஜுன் ரெட்டி.

இதன் தொடர்ச்சியாக இவரின் நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் தென்னிந்திய முழுவதும் பிரபலமானார். தற்போது இவர் நடித்திருக்கும் படம் லைகர். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அதன்படி சமீபத்தில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் பங்கேற்க பட குழுவினர் அனைவரும் சென்னை வருகை தந்தனர். அப்போது விஜய் தேவர் கொண்டா அரங்கிற்குள் வரும்போது அவருடன் இருந்த பாதுகாவலர் ஒருவர் அவரை யாரும் நெருங்காத வகையில் ரசிகர்களை தள்ளிவிட்டு கொண்டு வந்தார். அப்போது ரசிகர் ஒருவரை ஓங்கி அடித்து விட்டார்.

அது மட்டுமல்லாமல் மேடையில் விஜய் தேவர் கொண்டா உடல் ரசிகர் ஒருவர் படம் எடுக்க உயர்ந்த போதும் அவரை தள்ளி விட்டார். அப்போது அருகில் இருந்த டிடி இன் கையில் பலமாக அடி விழுந்ததால் ஒரு கணம் அவர் வலியால் துடித்து போனார். பின்பு எப்படியோ அதனை வெளியே காட்டாமல் சமாளித்துக் கொண்ட நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவை பார்த்த பலரும் பாடி கார்டை திட்டி வருகிறார்கள்.