தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் நடிகர் அஜித். ரசிகர்களால் அன்பாக தல என்று அழைக்கப்படுகிறார். அவரின் ஒவ்வொரு அசைவுகளையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.முதன் முதலாக அமராவதி திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் தடம் பதித்தார் அஜித்.

அதனைத் தொடர்ந்து ஆசை, வான்மதி, காதல் கோட்டை மற்றும் உல்லாசம் போன்ற பல்வேறு படங்கள் வெற்றி வாய்ப்பை கொடுத்தன. தற்போது இவர் எச். வினோத் இயக்கி வரும் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படம் அடுத்த வருடம் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித் குறித்து அவ்வபோது அன்சீன் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற நடன கலைஞர்கள் விழாவிற்கு வருகை தந்த அஜித் அவர்கள் அன்போடு கேட்டதற்காக மேடையில் நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த அஜித் ரசிகர்கள் பலரும் இணையத்தில் அதனை ஷேர் செய்து வருகிறார்கள்.