“சாப்பாட்டுக்கே வழியில்லை…. நான் அவ்வளவு கஷ்டப்பட்டேன்”…. மனம் உருகி பேசிய பிரபல சீரியல் நடிகர்….!!!!

சின்னத்திரையில் பிரபலமாகி வெகுவாக ரசிகர்களை கவர்ந்த பிரபலம் தான் நடிகர் பிரஜின் பத்மநாபன். இவர் முதலில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு துணை நடிகராக தனது கலை பயணத்தை தொடங்கிய இவர், ஜீவா நடித்த டிஸ்யூம் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் சீரியல்களில் நடிக்க தொடங்கினார். அவ்வாறு விஜய் டிவியில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை என்ற சீரியலில் நடித்ததன் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.இதனைத் தொடர்ந்து பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் மணல் நகரம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் இவர் நடித்துள்ளார்.

தமிழ் திரைப்படங்கள் மட்டும் அல்லாமல் மலையாளத் திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.  இந்நிலையில் வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து பிரஜின் முதன் முறையாக மனம் திறந்து பேசி உள்ளார். சீரியலில் இருந்து தற்போது சினிமாவுக்கு வந்திருக்கிறேன். சீரியலில் மட்டுமே வருமானம் வந்தது.சினிமாவிற்கு வர கிட்டத்தட்ட பத்து வருடங்கள் நிறைய கஷ்டப்பட்டேன்.

வீட்டு வாடகை கட்ட, லோன் கட்ட என எல்லாத்திற்கும் கஷ்டப்பட்டேன். இன்னும் சொல்லப்போனால் சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்பட்டு இருக்கிறேன். எனக்காக எல்லாத்தையும் திறந்து வந்த சான்ட்ரா, அவரைப் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு எனக்கு இருந்தது. உயிர் வாழனும் என்பதற்காக தான் சீரியல் செய்தேன். கஷ்டத்திற்காக காலையில் சீரியல் செய்வேன் இரவில் சினிமாவில் நடிப்பேன்.

பயணத்தில் மட்டுமே எனது தூக்கம் இருந்தது. எனக்கு விஜய் சேதுபதி சார் மாதிரி ஆக வேண்டும் என்று ஆசை. நான் என் மனைவியால் தான் சினிமாவில் நடிகனானேன். அவர் எனக்கு எல்லா மாதமும் இருந்துள்ளார்.ஒருவரிடம் எல்லாம் இருக்கும்போது யாரெல்லாம் கூட இருக்கிறார்கள் என்பதைவிட எதுவுமே இல்லாத போது யார் கூட இருக்கிறார்கள் என்பது தான் மிகவும் முக்கியம்.

என் மனைவி அப்படிப்பட்டவர் தான் என்று மனம் நெகிழ அவர் பேசியுள்ளார். அது மட்டுமல்லாமல் இரட்டைக் குழந்தை வேண்டுமென வேண்டியதாகவும் சாய்பாபா அருளால் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்ததாகவும் அவர் மனம் நெகிழ பேசியுள்ளார்.