நடிகை ராஸ்மிகாவின் குடும்பத்தை பார்த்திருக்கீங்களா?…. அவருக்கு இவ்வளவு அழகான தங்கையா?…. இதோ க்யூட் புகைப்படம்….!!!!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் தனது அழகில் ரசிகர்களை சொக்க வைத்திருப்பார். புஷ்பா திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்தது. அதற்கு முக்கிய காரணம் ராஷ்மிகாவும் தான்.

அந்தப் படத்தில் தனது நடிப்பை அற்புதமாக அவர் வெளிப்படுத்தி இருப்பார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக இவர் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வருகின்ற 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என பட குழு அறிவித்துள்ளது.

நடிகை ராஸ்மிகா மந்தனா, சுமன் மந்தனா மற்றும் மதன் மந்தனா தம்பதியினருக்கு பிறந்த மூத்த மகள். ராஷ்மிகாவுக்கு ஷிமம் மந்தனா என்ற ஒரு தங்கையும் உள்ளார். இந்நிலையில் நடிகை ராஸ்மிகா மந்தனா தனது அப்பா,அம்மா மற்றும் தங்கையுடன் குடும்பமாக இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுவரை அவரது குடும்பம் குறித்த புகைப்படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது அந்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் இணையத்தில் அதிக அளவு அதனை ஷேர் செய்து வருகிறார்கள்.