தமிழ் சினிமாவில் இன்றும் முன்னணி நடிகராக வலம் வருபவர் என்றால் அவர் ரஜினி தான்.சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் இவர் நடித்துள்ள பெரும்பாலான படங்கள் ஹிட் கொடுத்துள்ளனர். அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர்.

அவருக்கு வயதானாலும் அவரின் நடிப்பிற்கு இன்னும் வயதாகவில்லை. அப்போது இருந்த அதே ஸ்டைலில் இன்றளவும் கலக்கி வருகிறார். தனது நடிப்பால் ஆறிலிருந்து அறுபது வரை அனைவரையும் கட்டி போட்டவர். சர்வதேச அளவில் தமிழ் சினிமாவை கொண்டு சென்ற புகழ் நடிகர் ரஜினிக்கு அதிகமாகவே இருக்கின்றது.

இவரின் இந்த ராஜாங்கம் தமிழ் சினிமா உலகில் 47 வருடங்களாக கொஞ்சம் கூட குறையாமல் அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது. சில படங்கள் வெற்றி தோல்விகளை சந்தித்தாலும் இந்த வயதிலும் எனர்ஜி குறையாமல் அப்படியே இருக்கிறார் ரஜினி.
76 years of independence ???????? saluting sacrifices,struggles n strength.. #proudindian????????
47 years of #rajinism .. sheer hard work grit n dedication !proud to born to him #prouddaughter❤️ pic.twitter.com/be5yZGDHwu— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) August 15, 2022
இந்நிலையில் நடிகர் ரஜினிசினிமா திரை உலகில் 47 வருடங்களை நிறைவு செய்துள்ள நிலையில் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஏற்பாடு செய்திருந்த 47 years of rajinism பேனரை வியப்பாக எளிமையான தோற்றத்தில் நடிகர் ரஜினி பார்க்கும் புகைப்படங்களை அவரது மகள் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் சுதந்திர தினத்தன்று அப்பாவிற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொடியை குத்தும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. மேலும் ரஜினி தனது 47 ஆண்டுகால ரஜினிஸத்தை மிகப்பெரிய விழாவாக பிரம்மாண்டமாக கொண்டாடாமல் மிக எளிமையான முறையில் தனது வீட்டில் மகளுடன் கொண்டாடி இருப்பதை ரசிகர்கள் பலரும் பார்த்து அதுதான் ரஜினி சார் என்று கமெண்ட் செய்து இதனை கொண்டாடி வருகிறார்கள்.
Our lovely Jilluma .. Appa’s greatest fan and the superstar of our family ????????????????☺️☺️???????????? @OfficialLathaRK @rajinikanth @ash_rajinikanth pic.twitter.com/ccxVeoWRMW
— soundarya rajnikanth (@soundaryaarajni) August 16, 2022