“அதே இடத்தில்” அன்று விஜய், இன்று அஜித்…. எந்த இடம் தெரியுமா?…. ரசிகர்களுக்கு மாஸ் அப்டேட்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பலம் வருபவர் தளபதி விஜய். இவர் அண்மையில் நடித்த பீஸ்ட் திரைப்படம் தோல்வியை தழுவிய நிலையில் அடுத்ததாக வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது.

அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிலையில் துறைமுகத்தில் நடந்த படைப்பிடிப்பில் அதிரடி ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்பட்டதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.

இந்தத் திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.அதுமட்டுமல்லாமல் வாரிசு திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக களம் இறங்குகிறார். அதனால் மேலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு வாரிசு படக்குழுவினர் சென்னை திரும்பி உள்ள நிலையில் தற்போது அஜித் நடித்து வரும் ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு நாளை விசாகப்பட்டினத்தில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமல்லாமல் படப்பிடிப்பில் அஜித் கலந்து கொள்ள இருப்பதாகவும் நாயகி மஞ்சுவாரியாரும் கலந்து கொள்வார் என்றும் அங்கு படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் வரை நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.

ஏ கே 61 படத்தில் இன்னும் 30 சதவீதம் படப்பிடிப்பு மட்டுமே உள்ளது. விரைவில் படபிடிப்பு முடியவில்லை டிசம்பர் மாதத்தில் திரைப்படத்தை வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.