தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சினேகா. தனது சிரிப்பின் மூலம் புன்னகை அரசியாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார். இதனிடையே சினிமாவில் பிரபலமான நடிகரான பிரசன்னா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. திருமணத்திற்குப் பிறகு நடிப்பில் ஈடுபாடு காட்டாமல் கதாநாயகியாக நடிக்காமல் முக்கியமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து சினேகா நடித்து வருகிறார்.

இந்நிலையில் சினேகாவின் மகன் விஹான் கடந்த வாரம் தனது 7வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சினேகா பகிர்ந்துள்ளார்.

அதில் நீச்சல் குளத்தில் தனது மகன் மற்றும் மகளுடன் இருக்கும் குஷியான புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்களை அவர் பகிர்ந்தார். அதிலும் குறிப்பாக பிறந்தநாள் கொண்டாடும் தனது மகனின் பல்வேறு போஸ்ட்கள் கொண்ட புகைப்படங்களை அவர் இணையத்தில் பகிர்ந்து, வாழ்த்து தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து சினேகா தனது மகனின் பிறந்தநாளை குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உடன் மகிழ்ச்சியாக கொண்டாடினர். இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் பிரசன்னா கையில் மகளை தூக்கிக்கொண்டு சினேகாவுடன் நடனமாடியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.