தனுஷ் எடுத்த திடீர் முடிவு….. திருச்சிற்றம்பலம் படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம்….. எத்தனை கோடி தெரியுமா?….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இறுதியாக நடித்த மாறன் திரைப்படத்திற்கு பிறகு திருச்சிற்றம்பலம், நானே வருவேன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட பல படங்களில் நடிப்பதற்கு தனுஷ் கமிட் ஆகி உள்ளார். அதன்படி ஹாலிவுட் இயக்குனர் ரூஸ்சோ பிரதர்ஸ் இயக்கிய தி கிரே மேன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் மித்ரன் ஜவஹார் இயக்கத்தில் தனுஷ் மற்றும் நித்தியா மேனன் நடித்துள்ள திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். இந்தத் திரைப்படத்தில் ராஷி கன்னா மற்றும் பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து அனிருத் தனுஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார். என் படத்தின் பாடல்கள் அனைத்தும் அண்மையில் வெளியான நிலையில் அனைத்து பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த படத்தை தியேட்டரில் பார்த்து ரசிக்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இப்படத்திற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்திற்கு தனுஷ் வாங்கிய சம்பளம் குறைந்த விபரம் வெளியாகி உள்ளது. அதாவது இப்படத்தில் நடிக்க 15 கோடி சம்பளமாக தனுஷ் வாங்கியுள்ளார்.

இதற்கு முன்னதாக ஒரு திரைப்படத்திற்கு 30 கோடி வரை சம்பளத்தானது சம்பளத்தை குறைத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை தொடர்ந்து நானே ஒருவன் படம் ரிலீஸ் க்கு தயாராகி வருகின்றது. தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.