“சார் எங்களுக்கு ஒரு ஆசை”….. ஏர்போர்ட் ஊழியர்கள் சொன்ன ஒரு வார்த்தை…. அஜித் செய்த நெகிழ்ச்சி சம்பவம்….!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல என்று அனைவராலும் அறியப்படும் நடிகர் அஜித். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் கொடுத்துள்ளனர். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வலிமை திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.

இதனைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஏகே 61 படத்தில் நடிகர் அஜித் பிஸியாக உள்ளார். இதில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். ஹைதராபாத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. படத்தின் பூஜை போடப்பட்டதை தவிர அதன் பிறகு படத்தை குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

இருந்தாலும் படத்தைப் பற்றிய தகவல்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு தான் இருக்கின்றன. இந்தத் திரைப்படம் ஒரு வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகியுள்ளது.  இப்படத்தின் படப்பிடிப்பு 30 சதவீதம் பணிகள் முடிந்துவிட்ட நிலையில் அடுத்ததாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்புக்காக பட குழுவினர் சென்றுள்ளனர்.

இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் நடிகை மஞ்சு வாரியார் கலந்து கொள்ளும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் நடிகர் அஜித் விசாகப்பட்டினம் சென்றுள்ளார். அதற்காக சென்னை ஏர்போர்ட் வந்த போது அங்கு பேருந்தில் மக்களோடு மக்களாக இவர் பயணம் செய்த வீடியோக்கள் ஏற்கனவே வைரலான நிலையில் தற்போது சில புகைப்படங்களும் வெளியாகி உள்ளது.

அங்கு அஜித்துடன் சில ஹேர்போர்ட் ஊழியர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பிய நிலையில் அவர்களது ஆசையை நிறைவேற்றும் விதமாக அஜித் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அஜித் எளிமையும் ரசிகர்களுக்கு அவர் கொடுக்கும் மரியாதையும் தான் இவர்களை இந்த உயரத்திற்கு கொண்டு சென்றது என்று கூறலாம். மிக எளிமையாக அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.