தமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் கமல் காலகட்டத்தில் தொடங்கி இன்று வரை பல்வேறு படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் தான் நடிகர் நாசர். இவரின் நடிப்புக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது என்று கூறலாம். அந்த அளவிற்கு படங்களில் தனது நடிப்பின் திறமையை அபூர்வமாக வெளிப்படுத்தியவர்.

ஆனால் சினிமா வாழ்க்கை தற்போது வரை பிரகாசமாக இருந்தாலும் இவரின் குடும்ப வாழ்க்கையில் பல்வேறு சோதனைகள் இருக்கின்றன. இவருக்கு பைசல், லூத்புதீன், மெஹதி ஹாசன் என்ற மூன்று மகன்கள் உள்ளனர். இவரின் மூத்த மகனான பைசல் கடந்த 2014 ஆம் ஆண்டு திடீரென ஒரு விபத்தில் சிக்கினார். ஆனால் அந்தக் கோர விபத்தில் அவருடன் பயணித்த இரண்டு நபர்களும் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் நாசரின் மூத்த மகன் பைசல் மட்டும் மண்டையில் கடுமையான காயத்துடன் உயிர் பிழைத்தார்.

அவர் சிகிச்சைக்குப் பிறகு தற்போது வீட்டில் இருக்கின்றார். நாசரின் மகன் பைசல் தீவிரமான விஜய் ரசிகர். அவரின் காரின் பின்பகுதியில் விஜய் நடித்த மெர்சல் பெயரை தான் ஸ்டிக்கராக ஒட்டி இருப்பார். நாசரின் மகனை அடிக்கடி விஜய் வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து வருவார்.

அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு பிறந்தநாளிலும் வீட்டிற்கே சென்று கேக் வெட்டி கொண்டாடுகிறார். இது தொடர்பாக நாசர் அளித்த பேட்டி ஒன்றில் பேசி இருந்தார். அதில், தன்னுடைய மகன் விஜயின் தீவிர ரசிகன் என்றும் அவனுக்கு ஒரு மிகப்பெரிய விபத்து ஏற்பட்டபோது உயிர் பிழைத்ததே பெரிய விஷயம்.
என்னோட மூத்த பையன் விஜய்யோட மிகப்பெரிய ஃபேன் ஒரு பெரிய விபத்துல அவனுக்கு நினைவுகள் எல்லாம் போய்டுச்சு அவனுக்கு நினைவுல இருக்கது விஜய் மட்டும் தான் ஒருவிதத்தில என் பையன் திரும்ப வந்ததுக்கு காரணம் விஜய் தான்- நடிகர் "நாசர்"@actorvijay அண்ணா ????❤️????#ThalapathyVijay #Master #Beast pic.twitter.com/aUydOiVGzm
— Priyamudan Karthik (@KarthikMdr3) July 16, 2021
விபத்தில் அவனுடைய நினைவு முழுவதும் போய்விட்டது ஆனால் அவனுக்கு ஞாபகம் இருக்கும் ஒரே விஷயம் விஜய் மட்டும் தான். அன்று முதல் இன்று வரை என் மகனின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் விஜய் வீட்டிற்கு நேரில் வந்து கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடுவார் என்று நெகிழ்ச்சியுடன் பேசியவர் சாகும் வரை இதை நான் மறக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.