தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மாதவன். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் ராக்கெட்டரி நம்பி விளைவு. முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை பின்னணியை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.

இதனை மாதவன் இயக்கியுள்ளார். இந்தி, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பல மொழிகளில் இந்த திரைப்படம் வெளியானது. மேலும் இந்தியா, பிரான்ஸ், ரஷ்யா, கனடா, செர்பியா மற்றும் ஜார்ஜியா ஆகிய நாடுகளில் இந்த திரைப்படம் படமாக்கப்பட்டது.

கடந்த ஜூலை 1ஆம் தேதி பல்வேறு மொழிகளில் திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே இப்படத்திற்காக நடிகர் மாதவன் அவரது வீட்டை விற்றதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் அதை மறுத்துள்ள மாதவன், “நான் எனது வீடு உள்ளிட்ட எதையும் இழக்கவில்லை.உண்மையில் ராக்கெட்டரி படத்தில் பணிபுரிந்தவர்கள் அனைவரும் இந்த ஆண்டு அதிக வருமான வரி செலுத்துவார்கள். கடவுளின் அருளால் இந்த படத்தால் அனைவரும் நல்ல லாபம் ஈட்டினோம். நான் இன்னும் என் வீட்டில் தான் வசிக்கிறேன் என்று மாதவன் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
