“மூளை செயல்பாட்டை இழந்தது”…. மிக கவலைக்கிடமான நிலையில் காமெடி நடிகர்…. மனம் வருந்தும் ரசிகர்கள்….!!!

பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரபலமானவள் தான் நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் முதலில் மிமிக்ரி கலைஞராக அறிமுகமாகி பின்னர் காமெடியனாக உயர்ந்தவர். 59 வயதாகும் இவர் புது டெல்லியில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார்.

அப்போது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டு ஜிம்மில் கீழே சரிந்து விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். மருத்துவமனையில் அனுமதித்த பிறகு அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.ஆஞ்சியோ சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு அவரின் உடல் ஒத்துழைக்கின்றதுஎன்று மருத்துவர்கள் கூறிய நிலையில் அவர் தற்போது வரை சுயநினைவின்றி இருப்பதாகவும் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவரின் உடல்நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரின் உடல்நிலை குறித்து பேசிய மருத்துவர்கள்,அவரது உடல்நிலை மோசமடைந்து வருகிறது என்றும் மூளை செயல்பாட்டை இழந்து வருவதாகவும் கூறியுள்ளனர். இந்த செய்தியை அவரின் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவர் விரைவில் குணமடைந்து நலம் பெற வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.