தேசிய விருது வாங்க மனைவியுடன் சென்றிருந்த நடிகர் கமல்ஹாசன்.. பலரும் பார்த்திராத அறிய புகைப்படம் இதோ…

உலக நாயகன் என்று புகழ்பெற்ற கமல்ஹாசன் கடந்த 1988 ஆம் ஆண்டு சரிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சரா ஹாசன் என்ற இரு மகள்கள் உள்ளனர்.இவர்கள் இருவருமே தற்போது சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வருகிறார்கள். சிறுவயது முதலே சினிமாவில் நடித்து வந்தவர்தான் சரிகா.

இந்தி திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் இரண்டு முறை தேசிய விருது பெற்றுள்ளார்.இவர் கமல்ஹாசனை திருமணம் செய்து கொண்ட பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். குடும்பத்துடன் ஒன்றாக வாழ்ந்து வந்த கமல்ஹாசன் மற்றும் சரிகா தம்பதி கடந்த 2004 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் பெற்றோர் பிரிந்தாலும் மகள்கள் இருவரும் தொடர்ந்து இருவர் மீதும் அன்பு செலுத்தி வருகின்றனர்.

இதனிடையே கமல்ஹாசன் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரலாறு காணாத வெற்றியை படைத்துள்ளது. பல வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார் கமல்ஹாசன். இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து இந்தியன் 2 திரைப்படத்தில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளார்.

இப்படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் கமல்ஹாசன் அன்சீன் புகைப்படம் ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.அதாவது கமல்ஹாசன் தனது தேசிய விருதை பெறுவதற்காக சென்றபோது அவரின் முன்னாள் மனைவி சரிகா மற்றும் இரண்டு மகள்களுடன் சென்றுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.