“வாரிசா இருந்தா மட்டும் போதாது, இதுவும் வேணும்”….. திடீரென கடுப்பான அதிதி சங்கர்…. தக்க பதிலடி…..!!!!

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்திக் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் விருமன். இந்தத் திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் முதன் முறையாக ஹீரோயினியாக களமிறங்கியுள்ளார்.

இப்படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். அது மட்டுமல்லாமல் இப்படத்தில் ஒரு பாடலையும் அதிதி சங்கர் பாடியுள்ளார். முதல்முறையாக ஹீரோயினியாக அறிமுகமான படத்திலேயே மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளார் அதிதி சங்கர்.

இதனால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.அவ்வகையில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.சங்கரின் மகள் என்பதாலேயே அவருக்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றது.

இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் அதிதி சங்கர் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “என் தந்தையால் எனக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்திருக்கலாம். ஆனால் எனக்கு திறமை இல்லாவிட்டால் அடுத்த வாய்ப்புகள் கிடைக்காது. ரசிகர்கள் யாரும் என்னை ஆதரிக்க மாட்டார்கள். இந்தத் துறையில் என்னால் நிலைத்து நிற்க முடியாது. வாரிசு அந்தஸ்து இல்லை, மாறாக திறமை தான் கை கொடுக்கும் என்று அனைத்து விமர்சனங்களுக்கும் தக்க பதிலடி கொடுத்துள்ளார். இவரின் இந்த கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.