தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகை திரிஷா. இன்றளவும் நடிப்பிலும் சரி அழகிலும் சரி லட்சக்கணக்கான ரசிகர்களை கொள்ளை அடிப்பவர். இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதற்கு முன்பு சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன்.

இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியான நிலையில் அதில் திரிஷா கதாபாத்திரத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. இதனைத் தவிர இவர் நடித்துள்ள ராங்கி உள்ளிட்ட படங்களும் வெளியாக உள்ளது.

இந்நிலையில் நடிகை திரிஷா அரசியலில் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 20 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக உள்ள திரிஷாவுக்கு தற்போது 30 வயதாகும் நிலையில் இன்னும் சிங்கிளாக இருக்கிறார்.

அவருக்கு தற்போது பொது சேவையில் ஆர்வம் ஏற்பட்டுள்ளதால் விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணையப் போகிறாராம். ஏற்கனவே தமிழக அரசியலில் உள்ள நடிகைகள் யாரும் ஜொலிக்கவில்லை. எவ்வளவு முயன்றும் குஷ்பவால் எம்எல்ஏ ஆக முடியவில்லை. இன்னும் ஒரு சில நடிகைகளும் அரசியலில் இருக்கும் நிலையில் தற்போது புதிதாக திரிஷா களம் இறங்குகிறார்.