பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் அறிமுகமானவர் ஜூலி. இவர் முதலில் சென்னைமெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டார். அதன் மூலம்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் பல நெகட்டிவ் விமர்சனங்களையும் பெற்றார்.

இருந்தாலும் தற்போது சின்னத்திரையில் தொகுப்பாளராக வலம் வருகிறார். அதனைப் போலவே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. தற்போது ஜூலிக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் போட்டோ ஷூட் களில் அவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மாடலிங் துறையில் அதிக கவனம் செலுத்த தொடங்கி விட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார் ஜூலி. அப்போது அவர் என்னதான் கவனமாக விளையாடினாலும் நிரூப் இவரை கேவலமாக திட்டி அசிங்கப்படுத்தினார். தற்போது தனது அன்றாட பணிகளில் கவனம் செலுத்தி வரும் இவர் அவ்வப்போது நைட் பார்ட்டியில் கலந்து கொள்வது மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

அதன்படி பிக் பாஸ் பாலாவுடன் இவர் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜூலி மற்றும் பாலா உள்ளிட்ட சில பிரபலங்கள் கலந்து கொண்டனர்.அந்நிகழ்ச்சியில் நட்பு ரீதியாக ஜூலி பாலாவுடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
