என்னது…. திரிஷாவுக்கு மீண்டும் காதல் தோல்வியா?…. போஸ்ட்டை பார்த்ததும் குழம்பிப்போன ரசிகர்கள்…. என்ன நடந்திருக்கும்….????

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகை திரிஷா. இன்றளவும் நடிப்பிலும் சரி அழகிலும் சரி லட்சக்கணக்கான ரசிகர்களை கொள்ளை அடிப்பவர். இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதற்கு முன்பு சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன்.

இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியான நிலையில் அதில் திரிஷா கதாபாத்திரத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.20 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக உள்ள திரிஷாவுக்கு தற்போது 30 வயதாகும் நிலையில் இன்னும் சிங்கிளாக இருக்கிறார்.

இருந்தாலும் இரண்டு முறை காதல் தோல்விகளை சந்தித்துள்ளார்.அதன்படி முதலில் தெலுங்கு நடிகர் ராணா என்பவரை காதலித்த நிலையில் சில வருடங்களிலேயே இருவரும் பிரிந்தனர். அதன் பிறகு சினிமா தயாரிப்பாளரான வருண்மனியனை காதலித்து வந்தார்.

இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்த நிலையில் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்தனர். இந்த இரண்டு காதல் தோல்விகளுக்கு பிறகு சினிமாவில் முழு கவனம் செலுத்தி வருகின்றார் திரிஷா. இந்நிலையில் தற்போது திரிஷா இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வக்கிர குணம் கொண்டவர்கள் உங்களிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டால் அது மிகவும் நல்லது.

குப்பையே தன்னை வெளியே தூக்கி எரிந்து கொள்வது போல அது உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.திரிஷாவின் இந்த கோபமான பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் ஒருவேளை இவருக்கு மீண்டும் காதல் தோல்வி ஏற்பட்டிருக்குமோ என்று கேள்வி எழுப்பி வருவது மட்டுமல்லாமல் இந்த பதிவை இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.