“அவங்க என் அம்மா இல்ல, எப்பவும் ஆன்ட்டி தான்”…. ராதிகாவின் மகள் போட்ட பதிவு…. இணையத்தில் வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராக திகழ்ந்த சரத்குமாரின் மகள் தான் வரலட்சுமி. சரத்குமாருக்கும் அவருடைய முதல் மனைவி சாயாவிற்கும் பிறந்த மூத்த மகள் வரலட்சுமி. இவர் முதல் முதலாக போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து சண்டைக்கோழி மற்றும் சர்க்கார் உள்ளிட்ட படங்களின் வில்லியாக களமிறங்க அந்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா உள்ளிட்ட பல்வேறு படங்களில் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான இரவின் நிழல் மற்றும் பொய்க்கால் குதிரை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்று தந்தன. அதனால் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகின்றார்.

இவரின் தந்தையான சரத்குமார் கடந்த 2005 ஆம் ஆண்டு நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். சரத்குமார் தனது முதல் மனைவி சாயாவை விவாகரத்து செய்த பிறகு தான் ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். அவரின் முதல் மனைவி சாயாவுக்கு பிறந்த மகள் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

இதனிடையே ராதிகா தனது அம்மா இல்லை ஆன்ட்டி தான் என்று பல பேட்டிகளிலும் வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று அறுபதாவது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை ராதிகாவை வாழ்த்தும் விதமாக அவருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு வரலட்சுமி சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதிலும் ராதிகாவை ஆன்ட்டி என்றுதான் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.