அடடே இவங்களா?…. சில்க் ஸ்மிதா வாழ்க்கை படத்தில் நடிக்கும் பிரபல தமிழ் நடிகை…. ரசிகர்களுக்கு குஷியான செய்தி….!!!!

தென்னிந்திய சினிமாவில் 80 மற்றும் 90களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் சில்க் சுமிதா. அவரின் சுண்டி இழுக்கும் பார்வைக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. முதன் முதலாக 1980 ஆம் ஆண்டு வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் ரஜினி, கமல் மற்றும் விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய படம் மொழிகளிலும் கொடிகட்டி பறந்தவர். சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக கொடி கட்டி பறந்த இவர் 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவர் உயிரிழந்த இத்தனை வருடங்கள் ஆகியும் அவரின் புகழை ரசிகர்கள் என்றும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்நிலையில் சில்க் சுமிதாவின் வாழ்க்கை 2011 இல் மிலன் இயக்கத்தில் இந்தியில் “த டர்ட்டி பிக்சர்”என்ற பெயரில் சினிமா படமாக தயாராகி வெளியானது. அந்தத் திரைப்படத்தில் சில்க் சுமிதா வேடத்தில் நடித்த வித்யா பாலன் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.தற்போது சில்க் ஸ்மிதா வாழ்க்கை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இரண்டாம் பாகத்தில் சில்க் சுமிதாவின் இளம் வயது வாழ்க்கை சம்பவங்கள் இடம் பெறுவதால் வித்யா பாலன் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே சில்க் சுமிதா வேடத்துக்கு கங்கனா ரணாவத்தை அழகியுள்ளனர்.

ஆனால் அவரும் நடிக்க மறுத்து விட்டதால் டாப்ஸி, கீர்த்தி சனோன் ஆகியோரிடம் படக்குழுவினர் பேசி வருவதாகவும் டாப்ஸி நடிக்க அதிகப்படியான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.