உலகின் அழகான 100 பெண்கள் முகம்…. பட்டியலில் இடம் பிடித்த பிரபல நடிகை…. குவியும் பாராட்டு…..!!!!

உலகப் புகழ்பெற்ற டிசி காலண்டர் நிறுவனம் அவ்வப்போது ஏதேனும் கணக்கெடுப்பு நடத்தி புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது. தற்போது உலகின் அழகான 100 பெண்களின் முகங்கள் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் நடிகை  லட்சுமி மஞ்சு இடம் பிடித்துள்ளார்.

பிரபல தெலுங்கு முன்னணி நடிகரான மோகன் பாபுவின் மகள்தான் லட்சுமி மஞ்சு. இவர் தயாரிப்பாளராகவும் நடிகையாகவும் வலம் வருகிறார். அது மட்டுமல்லாமல் தந்தை மோகன் பாபுவுடன் இணைந்து அக்னி நட்சத்திரம் என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

பிரதீக் பிரஜோஸ் இயக்கி வரும் இந்த திரைப்படம் தற்போது தயாரிப்பில் இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் மோகன்லாலுடன் மான்ஸ்டர் படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். இதற்கு முன்னதாக கடல்,மயங்கினேன் தயங்கினேன் மற்றும் காற்றின் மொழி ஆகிய தமிழ் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

தற்போது புதிதாக தமிழ் திரைப்படம் ஒன்றை போலீஸ் அதிகாரியாக இவர் நடித்து வருகின்றார். அந்தத் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் உலகின் அழகான 100 பெண்களின் முகங்கள் என்ற பட்டியலில் நடிகை லட்சுமி மஞ்சு இடம் பெற்றுள்ளதை தொடர்ந்து பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.