செக் மோசடி வழக்கு…. பிரபல இயக்குனருக்கு 6 மாதம் சிறை…. நீதிமன்ற உத்தரவால் தமிழ் திரையுலகம் அதிர்ச்சி….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக பலம் வருபவர் இயக்குனர் லிங்குசாமி. இவர் தமிழில் ஆனந்தம், ரன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவரை இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் தி வாரியர். தெலுங்கு நடிகர் ராம் போத்திணேனி நடிப்பில் இந்த திரைப்படம் வெளியானது. அதில் கீர்த்தி செட்டி நாயகியாகவும் ஆதி வில்லனாகவும் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் இடம் பெற்ற புல்லட்டு பாடல் மற்றும் ஸ்ரீதேவி பிரசாந்தின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. லிங்குசாமி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை கலந்தாலும் நல்ல வெற்றியை பெற்றுள்ளது.

இந்நிலையில் பிரபல இயக்குனர் லிங்குசாமி செக் மோசடி செய்த வழக்கில் ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செக் மோசடி செய்ததாக பிவிபி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் லிங்குசாமி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து லிங்குசாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே பிரபல இயக்குனர் லிங்குசாமி செக் மோசடி வழக்கில் ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டு இருப்பது திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.