இந்தியாவின் பிரபலமான டாப் 10 நடிகைகளின் பட்டியலில் நடிகை சமந்தா முதலிடம் பிடித்துள்ளார். தற்போது சமந்தா விஜய் தேவரகொண்டா உடன் குஷி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஹாலிவுட் படத்திலும் நடிகை டாப்ஸி தயாரிக்கும் படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார்.

தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடர் மூலம் பாலிவுட்டில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றார் சமந்தா. தொடர்ந்து புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடனமாடியதன் மூலம் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகை யார் என்பது பற்றிய கருத்து கணிப்பை ஆர் மேக்ஸ் நிறுவனம் நடத்தியது. அதில் நடிகை சமந்தா முதலிடம் பிடித்துள்ளார்.

கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் வெளியான பட்டியலில் முதலிடம் பிடித்த சமந்தா தற்போது ஜூலை மாதத்திற்கான பட்டியலிலும் முதலிடத்தை தக்க வைத்துள்ளார்.ஆலியா பட் இரண்டாவது இடத்தையும், நயன்தாரா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளார். இவர்களுக்கு அடுத்ததாக காஜல் அகர்வால், தீபிகா படுகோனே, கீர்த்தி சுரேஷ், பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப், கியாரா அத்வானி ஆகியோர் டாப் 10 இடங்களை பிடித்துள்ளனர்.
