சூப்பர் சிங்கர் பூவையாரா இது?…. ஹீரோக்களுக்கு டப் கொடுப்பார் போலயே…. போட்டோவை பார்த்து வியப்பில் ஆழ்ந்த ரசிகர்கள்….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர்தான் பூவையார். கிராமத்தில் கானா பாடல் பாடி கொண்டிருந்த பூவையார் என்கின்ற நபிஸ், சங்கீதம் முறைப்படி கற்ற மாணவர்களுடன் போட்டியிட்டு பைனல் வரை சென்றவர்.

அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதில் விஜயுடன் பாடி நடனமாடி இருப்பார். அதனைத் தொடர்ந்து ஆதி தனது பாடல் ஆல்பம் அல்லது திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு பூவையாருக்கு கொடுப்பதாக கூறினார். இவர் தற்போது பல்வேறு திரைப்படங்களுக்கு பாட்டு பாடி வருகிறார்.

இந்நிலையில் விஜய் டிவியில் பிரியங்கா தொகுப்பாளனையாக அவதாரம் எடுத்து பத்து வருடங்கள் அண்மையில் முடிந்தது. இதனை கொண்டாடும் விதமாக விஜய் டிவி பிரபலங்கள் பலரும் வருகை தந்து அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்தனர்.அப்போது பூவையாரும் வருகை தந்து தொகுப்பாளினி பிரியங்காவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு பூவையாரை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு வளர்ந்து விட்டாரே என்று ஆச்சரியத்துடன் அவரின் புகைப்படங்களை தற்போது இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.