நடிகர் ரஜினியின் ஜெயிலர் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…. தனுஷ் போட்டோ ட்விட்டர் பதிவு…. இணையத்தில் வைரல்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தமிழ் சினிமா மட்டும் அல்லாமல் கோலிவுட் வட்டாரத்திலும் கலக்கி வருகிறார். இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான தி கிரே மேன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. தற்போது தனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம்.

இப்படத்தில் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் நடிகர் பிரகாஷ்ராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் மற்றும் ராக்ஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இப்ப படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஓ பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அண்மையில் வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. என் நிலையில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க தயாராகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் போஸ்டர் குறித்து தனுஷ் twitter பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினி தற்போது ஜெய்ஹிந்த் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அனிருத் இசையமைப்பில் உருவாகும் இந்த திரைப்படத்தில் தமன்னா மற்றும் பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இதனிடையே ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்க உள்ளதாக பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தது. அந்தப் பதிவினை பார்த்த நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், WOW என்று கேப்சன் கொடுத்து பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அந்த ட்விட்டர் பதிவை தற்போது இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.