தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரின் நடிப்பில் தற்போது பத்து தல திரைப்படம் உருவாகி வருகிறது. சிம்புவை வைத்து இயக்குனர் கௌதம் மேனன் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா மற்றும் வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அதில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் அடுத்த மாதம் 15 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக பத்து தல திரைப்படத்தில் சிம்பு கவனம் செலுத்தி வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கர்நாடகா மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் நடைபெற்று வருகின்றது. ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படம் கன்னடத்தில் மெகா ஹிட் ஆன முப்தி படத்தின் ரீமேக் ஆக உருவாக்கப்பட்டு வருகிறது.

இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு படத்தில் மாற்றங்கள் செய்திருப்பதாக படத்தின் இயக்குனர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இப்படத்தை சூர்யா நடிப்பில் வெளியான ஜில்லுனு ஒரு காதல் என்ற திரைப்படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இயக்கி வருகின்றார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார்.

இப்படத்தில் நடிகர் சிம்பு ஏ ஜி ஆர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வருகின்ற டிசம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் சிம்பு படப்பிடிப்பில் மலையாள நடிகை அனு சித்தராவுடன் இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வரும் இவர் சிம்புவுடன் படத்தில் இணைக்க உள்ளதாக தெரிகின்றது.