தமிழ், மலையாள மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய்பல்லவி. கடந்த 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமானார் சாய் பல்லவி. என்றும் பலர் அவரை மலர் டீச்சர் என்று தான் கூப்பிடுகிறார்கள். அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.

தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் தமிழில் தியா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகி தனுஷ் மற்றும் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடிக்க தொடங்கினார். இவரரின் நடிப்பில் அண்மையில் வெளியான கார்கி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

கௌதம் ராமச்சந்திரன் இயக்கிய இந்த திரைப்படத்தில் சாய் பல்லவி உடன் காளி வெங்கட், ஆர் எஸ் சிவாஜி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா உடன் நான் ஜோடி சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று சாய் பல்லவி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். பெரும்பாலும் குடும்ப பாங்கான கதைகளையும் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே தான் தேர்ந்தெடுத்து நடித்து வருவதாக கூறிய அவர் விஜய் தேவரகொண்டா உடன் மட்டுமே ஜோடி சேர்ந்து நடிக்க மாட்டேன் என கூறியுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான டியர் காம்ரேட் என்ற திரைப்படத்தில் முதலில் சாய்பல்லவி நாயகியாக நடித்து வந்ததாகவும் அதில் அதிக அளவு முத்த காட்சிகள் இருப்பதாக கூறி விலகியதாகவும் கூறப்படுகிறது.அதனாலையே அவர் விஜய் தேவரகொண்டா உடன் எந்த படத்தில் நடிக்க கூடாது என முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.