தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் தான் பாரதிராஜா. இவர் இயக்கத்தில் வெளியான மண்வாசனை கலந்த பல்வேறு திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் கொடுத்துள்ளன. அது மட்டுமல்லாமல் 90களில் மிகச் சிறந்த நாயகிகளாக இருந்தவர்கள் பெரும்பாலானோர் பாரதிராஜாவின் மூலம் அறிமுகமானவர்கள் தான்.

பல முன்னணி இயக்குனர்கள் இவரிடம் தான் பாடம் கற்றுக் கொண்டனர். இவர் இயக்கத்தில் உருவாகும் அனைத்து படங்களுமே நல்ல கருத்து கதை கரு கொண்ட படங்களாக தான் இருக்கும். இவர் சமீபகாலமாக ஒரு சில படங்களில் கூட சித்திர வேதங்களில் நடித்து வருகின்றார். அவ்வகையில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் நடிகர் தனுசுக்கு தாத்தாவாக இவர் நடித்துள்ளார்.

இதனிடையே பாரதிராஜாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக அண்மையில் தகவல் வெளியானது.கடந்த வாரம் மதுரை விமான நிலையத்தில் திடீரென அவர் மயக்கம் போட்டு விழுந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பிறகு ஒருநாள் மதுரையிலேயே தங்கி விட்டு அடுத்த நாள் சென்னை திரும்பினார்.

இந்நிலையில் அவருக்கு திடீரென அஜீரண கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து சென்னையில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. அவர் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருப்பார் என்று பாரதிராஜா தரப்பிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.அவர் விரைவில் உடல் நலம் தேறி வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் இறைவனைப் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.