விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஒரு நல்ல குடும்ப கதையாக ரசிகர்கள் மத்தியில் பலம் வருகிறது. தினம்தோறும் தவறாமல் இந்த சீரியலை பார்ப்பதற்கே ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது.

இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பாக்யா என்ற வேடத்தில் நடித்து வரும் சுசி. இந்த சீரியல் குடும்பப் பெண்களின் வாழ்க்கையை அற்புதமாக எடுத்துரைக்கிறது.வாழ்வில் எத்தனை துன்பங்கள் இருந்தாலும் குடும்ப தலைவியாக இருந்து அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் கட்டிக் காக்கும் பாக்யாவின் இந்த குடும்ப கதை ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஹிட் தான்.

இந்தத் தொடரில் ராதிகா என்ற பெயரில் நடித்து வருபவர் தான் பிரபல நடிகை ரேஷ்மா. இவர் இந்த தொடரை தாண்டி பல சீரியல்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்துள்ள இவரின் சொந்த வாழ்க்கை குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது இவருக்கு ஒரு சகோதரர் இருப்பதாகவும், அவர் வேறு யாரும் இல்லை நடிகர் பாபி சிம்ஹா தான் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
