அம்மாடியோ….. இவ்வளவு பிரமாண்டமா?…. அப்பவே இந்தியன் படத்திற்கு தூள் கிளப்பிய விளம்பரங்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருப்பவர் தான் கமல்ஹாசன்.இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் சாதனையை படைத்தது.

இதனிடையே உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் இந்தியன். வரலாறு காணாத வெற்றியடைந்த இப்படத்தின் இரண்டாம் பாகத்தை கிட்டத்தட்ட 26 வருடங்களுக்குப் பிறகு தற்போது உருவாக்க உள்ளனர்.

ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பு 60% முடிவடைந்த நிலையில் விபத்து காரணமாக நிறுத்தப்பட்டது. இதை இடையே மீண்டும் இப்படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. தற்போது கமலின் ரசிகர்கள் இந்தியன் திரைப்படம் குறித்த சுவாரசியமான சில விஷயங்களை தற்போது இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

அதாவது இந்தியன் திரைப்படத்தின் முதல் விளம்பரப்படுத்தும் பணிக்காக வெளியிடப்பட்ட போஸ்டர்களை ரசிகர்கள் தற்போது பதிவிட்டுள்ளனர். அப்போது இந்தியன் படத்தின் போஸ்டரை எல்லா நாளிதழிலும் ஒரு பக்கம் முழுவதுமாக வெளியிடப்பட்டது.

மேலும் படத்தின் பூஜையின் போது ஸ்டுடியோ மற்றும் நகரம் முழுக்க விளம்பரம் படுத்தப்பட்டது.அதனை ஒப்பிட்டு பார்க்கும்போது லைக்கா நிறுவனம் பெரிய விஷயமாக எதுவும் செய்யவில்லை என்று ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.