என்னது….இது 2 லட்சமா?…. அப்படி என்னம்மா இதுல ஸ்பெஷல் இருக்கு…. பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா வாங்கிய பொருள்….!!!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் அதிக மவுசு உள்ளது. பெரும்பாலான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே ஹிட் கொடுக்கும். அந்த வகையில் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்த பிரபலமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த சீரியல் கூட்டுக் குடும்பத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தினம்தோறும் இந்த சீரியலை பார்க்கும்போது அனைவரும் கூட்டுக் குடும்பமாக வாழ வேண்டும் என்ற ஆசையை தூண்டும் விதமாக இந்த சீரியல் அமைந்துள்ளது.

அதில் நாளுக்கு நாள் நடைபெறும் சண்டைகள் ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் குடும்பத்தில் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இருப்பதை பார்க்கும் போது மனம் நெகிழ செய்கிறது. சீரியலாக இருந்தாலும் ஒரு ரியலைஸ் ஸ்டோரியை கொண்டுவரும் வகையில் அந்த சீரியல் அமைந்துள்ளது. அதில் நடித்து வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் தான்.

இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஹேமா. இவர் நடிப்பையும் தாண்டி இணையத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பார். சொந்தமாக ஒரு youtube சேனலை நடத்தி வருகிறார். அதில் அடிக்கடி நிறைய விஷயங்களை பதிவு செய்வார். அதாவது ஷாப்பிங் செய்வது, வீட்டில் இருக்கும் பொருள்கள் மற்றும் ஹோட்டலுக்கு செல்வது என அனைத்து விஷயங்களையும் அதில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டவர்.

அவ்வகையில் சமீபத்தில் இவர் தனது வீட்டில் இருக்கும் பிரிட்ஜ் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கிட்டத்தட்ட இரண்டு லட்சத்திற்கு மதிப்புள்ள அந்த ஃப்ரிட்ஜில் என்னென்ன இருக்கின்றது அதில் ஸ்பெஷலாக என்ன உள்ளது என்பதை அவர் அதில் கூறி இருந்தார்.அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.