“கோப்ரா குழந்தை”…. ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கையில் குழந்தையுடன் மேடை ஏறிய விக்ரம்…. அந்த குழந்தை யார் தெரியுமா….????

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விக்ரம். இவரின் நடிப்பில் அண்மையில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கோப்ரா. இந்த திரைப்படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். படத்தின் டிரைலர் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி வெளியானது.

இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி செட்டி நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து கே எஸ் ரவிக்குமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹீர்பான் பதான், மியா சார்ஜ், ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தை லலித் குமார் தயாரித்துள்ளார்.

படத்தின் டிரைலர் அண்மையில் வெளியான நிலையில் 7 வித்தியாசமான கெட்டப் களில் விக்ரம் இப்படத்தில் நடித்து அசத்தியுள்ளார்.  இதனிடையே அண்மையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொண்ட மியா ஜார்ஜ் கோப்ரா படத்தின் அனுபவங்கள் பற்றி பகிர்ந்துள்ளார்.

அதாவது, கடந்த 2020 ஆம் ஆண்டு தான் சிங்கிளாக இருக்கும்போது இந்த படத்தை கமிட் செய்வதாகவும், படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தனக்கு திருமணமானது. தற்போது 2022 ஆம் ஆண்டு தனது மகனுடன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வந்திருப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

அதன் பிறகு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் மியா  சார்ஜ் மகனை தூக்கிக்கொண்டு நடிகர் விக்ரம் மேடையில் ஏறும் போது திடீரென வெடியை வெடித்தனர்.அதனைப் பார்த்த விக்ரமின் ரசிகர்கள் பலரும் நிகழ்ச்சியை நடத்துபவர்கள் கவனமாக இது போன்ற விஷயங்களை கையாள வேண்டும் என்று தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும் மேடை எளிய பிறகு மியா ஜார்ஜின் மகரை கோப்ரா பேபி என்று செல்லமாக அழைத்தார் விக்ரம்.