“இது வெறும் டிரைலர் தான்”…. ஹீரோயினியாக என்ட்ரியாகும் குக் வித் கோமாளி சுனிதா…. ரசிகர்களுக்கு குஷியான அப்டேட்….!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்தான் நடிகை சுனிதா. இவர் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். வடமாநிலத்தை சேர்ந்த இவர் குழந்தை போல கொஞ்சும் தமிழில் பேசுவது ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே வைரல் தான்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த மூன்று சீசன்களாக கோமாளியாக நடித்து வருகிறார். அதில் இவர் தமிழில் சொதப்புவது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிடிக்கும். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூறலாம். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் தோழியாக நடித்திருப்பார். இவர் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்.

இதனிடையே சுனிதா சந்தோஷ் பிரதாப்புடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ள நிலையில் அது குறித்த வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

மேலும் இது வெறும் டிரைலர் தான் என்றாலும் விரைவில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று அவர் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Sunita Gogoi (@sunitagogoi_offl)