தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்து அளவிற்கு வெற்றி பெறாத நிலையில் தற்போது வாரிசு திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். வம்சி இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா வந்தனா நடிக்கிறார்.

விஜய்க்கு அப்பாவாக சரத்குமார் மற்றும் இவர்களுடன் இணைந்து யோகி பாபு மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் அனைவரும் படத்தில் நடித்து வருகிறார்கள்.மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது.

இந்நிலையில் சென்னையில் தளபதி விஜய் புதிய வீடு ஒன்று வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சென்னையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பிளாட் ஒன்றை விஜய் வாங்கியுள்ளார். அந்த பிளாட் ஒன்றின் விலை 35 கோடியாம்.

சென்னை நீலாங்கரையில் இருக்கும் வீட்டில் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வரும் விசை புதிதாக வாங்கியுள்ள இந்த வீட்டை அலுவலகமாக பயன்படுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
