சவுத் இந்தியா பிரின்ஸ் மற்றும் டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்றுரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வரும் நடிகர் தான் மகேஷ் பாபு. பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் இளைய மகன். டோலிவுட்டில் பல வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார். கடந்த 1979 ஆம் ஆண்டு நீடா என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதன் பிறகு 1999 ஆம் ஆண்டு ராஜகுமாரடு என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது பல்வேறு படங்களில் நடித்து அசத்தி வருகிறார். இந்நிலையில் பிரபல ஜி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் இந்தியா டான்ஸ் என்ற தெலுங்கு ரியாலிட்டி ஷோவில் மகேஷ்பாபு தனது மகளுடன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கருப்பு நிற முழுக்கை டிசைன் மற்றும் ஒரே மாதிரியான உடை அணிந்து எப்பொழுதும் போல் நடனம் ஆடினர். மகேஷ் பாபு நடிப்பில் வெளியான சர்கார் வாரி பட்டா திரைப்படத்தின் பாடலான பெண்ணி பாடலுக்கு அவரின் மகள் சித்தாரா நடனமாடி அசத்தார். மகேஷ் பாபு தனது செல்ல மகள் தனக்கு பின்னால் மற்ற போட்டியாளர்கள் நடனம் ஆடுவதை பார்த்து பூரித்துப் போனார்.

லைப் ஸ்டூடியோ பார்வையாளர்கள் முன்னிலையில் மேடையில் பெண்ணுக்கு படி ஸ்டெப்புகளை போட்ட சித்ராவை அன்பால் அரவணைத்தார் மகேஷ் பாபு. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Never Before Ever After????????
'డాన్స్ ఇండియా డాన్స్ తెలుగు' షో కి విచ్చేసిన సూపర్ స్టార్ @urstrulyMahesh & ప్రిన్సెస్ #Sitara ????????????ఈ ఆదివారం ఎపిసోడ్ దద్దరిల్లిపోద్ది????????
Watch #DanceIndiaDanceTelugu This Sunday at 9 PM on #ZeeTelugu #DIDTelugu#SSMBxSitaraForDIDTelugu pic.twitter.com/PVsaXJcTf6
— ZEE TELUGU (@ZeeTVTelugu) August 29, 2022