என்றும் நினைவில் மறவாத 16 வயதினிலே திரைப்படம்…. ரஜினி, கமல் வாங்கிய சம்பளம் இவ்வளவா?…. தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க….!!!!

தமிழ் சினிமாவில் 90 மற்றும் 80களில் ரசிகர்களால் மறக்க முடியாத அளவிற்கு பல்வேறு திரைப்படங்கள் மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளனர். அந்த வரிசையில் முதலிடத்தில் இருக்கும் படம் தான் 16 வயதினிலே. இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்கியராஜ், நடிகர்கள் கமலஹாசன், ரஜினிகாந்த், கவுண்டமணி, நடிகை ஸ்ரீதேவி மற்றும் இசைஞானி இளையராஜா உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் பணிபுரிந்த திரைப்படம் தான் 16 வயதினிலே.

இது வெறும் படமாக மட்டுமல்லாமல் சினிமாவில் இயக்குனர்களாக வேண்டும், நடிகர்களாக வேண்டும் என்ற முனைப்புடன் வருபவர்களுக்கு மிகப்பெரிய பாடமாக அமைந்த திரைப்படம். இந்த திரைப்படம் 1977 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் சப்பானி வேடத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் தான் கமல்ஹாசன். அதில் ரஜினியும் தனது அசாத்திய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருப்பார். இந்நிலையில் இப்படத்தில் நடிப்பதற்கு கமல்ஹாசனுக்கு 27 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்துள்ளனர்.

ஆனால் ரஜினிக்கு ஐந்தாயிரம் ரூபாய் கேட்கப்பட்டிருந்த நிலையில் இறுதியாக மூவாயிரம் ரூபாய் பேசி அதிலும் 500 ரூபாய் பாக்கி வைத்துக் கொண்டு 2500 ரூபாய் மட்டுமே சம்பளம் கொடுத்துள்ளனர். படத்தில் நடிக்கும் போது கமலுக்கும் ஸ்ரீதேவிக்கும் இளநீர் கொடுப்பார்கள்,ஆனால் ரஜினிக்கு அது கூட தந்ததில்லை என பாரதிராஜா 2013 ஆம் ஆண்டு இப்ப படத்தின் ரி ரீலீஸ் ட்ரெய்லர் வெளியீட்டின் போது கூறி இருந்தார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.