11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்…. யுவன் எடுத்த அதிரடி முடிவு…. செம குஷியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் இன்று சிறந்த இசையமைப்பாளராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் யுவன் சங்கர் ராஜா. தனது தந்தை இளையராஜா போலவே கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார். இவர் பல்வேறு சிறந்த படங்களுக்கு இசையமைத்து சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார்.

இவர் இசைக்காக இன்றும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றன. இவர் முதன்முதலில் அரவிந்தன் என்ற திரைப்படத்தில் இசையமைத்து தனது திரைப்பயணத்தை தொடங்கிய நிலையில் தற்போது முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் படங்களுக்கு சிறந்த தீம் மியூசிக் போட்டு அசத்தியுள்ளார்.

இந்நிலையில் சென்னையில் விரைவில் இசை நிகழ்ச்சி நடத்தப் போவதாக யுவன் அண்மையில் அறிவித்திருந்தார். இந்த இசை கச்சேரிக்கு யு & ஐஎன்று பெயரிடப்பட்டுள்ளது என்றும் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சிக்கு அரைஸ் என்டர்டைன்மென்ட் ஏற்பாடு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியானது முதல் மாபெரும் இசை நிகழ்ச்சியை கண்டும் கேட்டும் கழிக்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கிட்டத்தட்ட 11 வருடங்களுக்குப் பிறகு சொந்த மண்ணில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார் யுவன். இந்த இசை மாயாஜாலத்தை ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆர்வமாக எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.