அப்போ அஞ்சலி இப்போ வாணி போஜன்….. நடிகர் ஜெய்யின் அடுத்த டார்கெட்….. புதிய சர்ச்சையில் சிக்கிய நடிகை….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை வாணி போஜன். சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான இவர் செல்லமாக சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்படுகிறார்.. கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனார்.

இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது பகைவனுக்கு அருள்வாய், பாயும் புலி நீ எனக்கு, ஊர் குருவி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார்.இதனைத் தவிர பல பட வாய்ப்புகளும் இவருக்கு குவிந்த வண்ணம் உள்ளன. இப்படி பிசியான நடிகையாக வலம் வரும் வாணி போஜன் தற்போது புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கி உள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது நடிகை வாணி போஜனிடம் கதை சொல்வதற்காக இயக்குனர் ஒருவர் சென்றபோது அவருடன் நடிகர் ஜெய் இருந்ததாகவும், பிறகு கதை சொல்வதாக கூறிவிட்டதாகவும் இயக்குனர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதுவும் ஒருமுறை இரண்டு முறை அல்ல நான்கு முறை வாணி போஜனிடம் கதை சொல்ல சென்ற போதும் நடிகர் ஜெய் அவருடன் இருந்ததாகவும் அதனால் இயக்குனர் கதை சொல்லாமலே திரும்பி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இப்படிதான் சில வருடங்களுக்கு முன்பு நடிகை அஞ்சலி இடம் நடிகர் ஜெய் இருந்ததாகவும் அவரை காதலித்து வந்த போது அவர் நடிக்கும் படப்பிடிப்பு தளங்களுக்கு கூடவே சென்று இந்த காட்சியில் நடிக்க மாட்டார் அந்த காட்சியில் நடிக்க மாட்டார் என்று சொல்லி நடிகை அஞ்சலிக்கு கிடைக்க இருந்த பட வாய்ப்புகளை தவற விட்டு அவரின் மார்க்கெட் சரிந்ததற்கு ஜெய்தான் முக்கிய காரணம் என்று தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து தற்போது வாணி போஜன் உடன் நடிகர் ஜெய் இருந்து அவருக்கு இருக்கும் மார்க்கெட்டை குறைவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. வாணி போஜன் உடன் நடிகர் ஜெய் உடன் இருப்பதால் அவரிடம் கதை சொல்ல இயக்குனர்கள் தயங்குகிறார்கள். இதனால் நடிகை வாணி போஜனின் கெரியருக்கு பெரும் பின்னடைவு அமையும் என்று பிரபல சினிமா பத்திரிக்கையாளர் ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இந்தச் செய்தி ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.