பிரபல கிரிக்கெட் வீரருடன் டேட்டிங்கில் சாரா அலிகான்….. வீடியோவை பார்த்ததும் ஷாக்கான ரசிகர்கள்….!!!!

பாலிவுட் திரை உலகில் கலக்கி கொண்டிருக்கும் பிரபல நடிகர் சையப் அலி கான் மகள்தான் சாரா அலிகான். இவர் 2018 ஆம் ஆண்டு வெளியான கேதார்நாத் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். தனுஷ் நடிப்பில் வெளியான அத்ராகி ரே என்ற திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.

இதனிடையே பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான சுப்மன் கில்லுடன் ஹோட்டலில் சாரா அலி கான் உணவருந்தும் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த இணையவாசிகள் இருவரும் டேட்டிங்கில் இருப்பதாக தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

இதற்கு முன்னதாக சுப்மன் கில் மற்றும் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரார் டெண்டுல்கர் ஆகிய இருவரும் ஒன்றாக இருக்கும் பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில் இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களாக இருவருக்கும் காதல் என்று பேசப்பட்டு வந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு சாரா டெண்டுல்கர் பதிவிட்ட ட்விட்டர் பதிவு இருவருக்கும் இடையே காதல் என்று பேசப்பட்டதற்கு ஆரம்ப புள்ளி வைத்தது.

இருவருக்கும் இடையே காதல் என்று பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது துபாயில் சுப்மன் கில் சாரா அடிக்காமுடன் ஹோட்டலில் டின்னர் சாப்பிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் சாரா டென்டல்கர் என்ன ஆனார் என்று ரசிகர்கள் பலரும் கமாண்ட் செய்து வருகிறார்கள்.