சினிமாவில் தங்கர் பச்சன் நடிப்பில் வெளியான சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமானவர்தான் வெண்பா.அதனைத் தொடர்ந்து கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் குட்டி ஆனந்தியாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.

இவர் சிறுவயதில் நடிப்பது மட்டுமல்லாமல் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் விஜேவாக பணியாற்றினார். அதன் பிறகு கதாநாயகியாக தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் முதன் முதலாக காதல் கசக்குதையா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக என்ட்ரி ஆனார். இவர் நடித்த பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானதை தொடர்ந்து வெள்ளி திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து அசத்தினார்.

அண்மையில் ஆனந்தம் விளையாடும் வீடு என்ற திரைப்படத்தில் கௌதம் கார்த்திக்கின் தங்கையாக வெண்பா நடித்த நிலையில் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பல கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து அல்வா, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் சின்னத்திரையில் ரீஎன்ட்ரி கொடுக்க இருப்பதாக சோசியல் மீடியாவில் த்கவல் வைரல் ஆகி வருகின்றது.

இதனிடையே பிரபல மீடியா செய்தியில், வெண்பாவிற்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால் சீரியலில் நடிக்க இருக்கிறார்,அதனால் இவர் சீரியலில் கொடுக்கும்படி என்று நன்றாக இருக்கும் என்று செய்தி வெளியிடப்பட்டது. இதைப் பார்த்து கடுப்பான வெண்பா, நான் இப்போதும் சினிமாவில் மட்டும்தான் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

சீரியல் வாய்ப்புகள் எதுவும் எனக்கு வராததால் நான் எதிலும் நடிக்கவும் ஒப்புக் கொள்ளவில்லை. முதலில் உண்மையை தெரிந்து கொண்டு செய்தியை போடுங்கள். இது போன்ற தவறான செய்தியை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டாம் என அவர் கூறியுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.