முதல் கணவரை விவாகரத்து செய்து…. திடீரென 2-வது திருமணம் செய்த சீரியல் நடிகை மஹாலட்சுமி…. காரணம் என்ன…..???

சீரியல் நடிகை மகாலட்சுமி முதல் கணவரை பிரிந்து ஏன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மகாலட்சுமி அணில் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு குடும்ப பிரச்சனை காரணமாக கணவரை விட்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார் மகாலட்சுமி.

இதனைத் தொடர்ந்து மகாலட்சுமி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய நிலையில் அவரின் கணவர் அனைத்து பிரச்சனையும்விரைவில் தீர்ந்துவிடும் என நினைத்து அவருடன் வாழ தயாராக இருந்தும் கணவரை விட்டு பிரிவதில் மகாலட்சுமி உறுதியாக இருந்தார். இதனால் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று இரண்டு வருடங்கள் ஆன நிலையில் மகாலட்சுமி சன் டிவியில் ஒளிபரப்பாகும் அன்பே வா சீரியலில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில்  மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை நேற்று திருப்பதியில் திடீரென திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணத்தில் குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் மற்றும் தொலைக்காட்சி துறை தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட புதுமண தம்பதிகளை வாழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து தனது திருமண புகைப்படங்களை வெளியிட்ட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன், எல்லோரும் மகாலட்சுமிபோல பெண் அமைய வேண்டும் என்று நினைப்பார்கள் ஆனால் எனக்கு மகாலட்சுமியே வாழ்க்கைத் துணையாக அமைந்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள அவர் விரைவில் தங்கள் திருமணம் எதனால் நடந்தது எப்போது இது உறுதி செய்யப்பட்டது என்பது குறித்த காரணங்களை விரைவில் வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.அதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காரணத்தை தெரிந்து கொள்ள காத்திருக்கின்றன.