4 நாட்களுக்கு முன்னதாகவே…. 5 வருட காதலியை கரம் பிடித்த புகழ்…. புதுமண தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்து….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர்தான் புகழ். அந்நிகழ்ச்சியில் ஒரு சில நாட்கள் மட்டுமே இருந்து வெளியேறிய இவர் அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இருந்தாலும் விஜய் டிவி கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.

அந்த நிகழ்ச்சியில் இவர் செய்யும் காமெடிகளுக்கு அளவே இல்லை. அந்நிகழ்ச்சியை தொடங்க இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது சபாபதி, வலிமை, யானை மற்றும் என்ன சொல்லப் போகிறாய் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சில பட வாய்ப்புகளும் இவர் கைவசம் வைத்துள்ளார். அது மட்டுமல்லாமல் Zoo கீப்பர் எனும் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாக உள்ளார்.

இந்நிலையில் தனது நீண்ட நாள் காதலியான பென்சியாவை விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக புகழ் சமீபத்தில் அறிவித்திருந்தார். கடற்கரையில் க்யூட் ஆக போட்டோ சூட் நடத்தி விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக அறிவித்தனர். இந்நிலையில் புகழ்  மற்றும் பென்சியின் திருமணம் நேற்று நடைபெற்றது.அந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் புகழுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

செப்டம்பர் ஐந்தாம் தேதி திருமணம் நடைபெறும் என புகழ் தனது திருமண பத்திரிக்கையை வெளியிட்ட நிலையில் புகழின் திருமணம் நேற்று நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களின் திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் முக்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.