சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ப்ரேமி வெங்கட். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியலில் மல்லிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் சிறுவயதில் இருந்தே நடிப்பு மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

பள்ளி படிக்கும் போது ஏராளமான ஸ்டேஜ் ப்ரோக்ராமில் கலந்து கொண்டுள்ளார். முதலில் ஆசிரியராக பணியாற்றி வந்த இவருக்கு பல்வேறு விளம்பரங்கள் மற்றும் ஷார்ட் பிலிம் களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கழித்து சின்னத்திரையில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

முதல் முதலில் வாணி ராணி சீரியலில் அறிமுகமான இவருக்கு அடுத்தடுத்து சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. சன் குடும்ப விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த வெள்ளிக்கான விருது இவருக்கு கிடைத்தது. தொடர்ந்து ஜீ தமிழ் மற்றும் விஜய் டிவியில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

மேலும்நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்திலும் ஒரு கேரக்டர் ரோலில் இவர் நடித்துள்ளார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியலில் மல்லிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் அவ்வபோது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது வழக்கம். அவ்வகையில் அண்மையில் அவர் மருத்துவமனையில் கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர் எதனால் கர்ப்பமாக இருக்கிறார் என்று குழப்பத்தில் இருந்தனர். இந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிரேமி வெங்கட் சமீபத்தில் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், தாய்மை என்ற குறும்படத்தில் கார்த்திக்கு இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும், அம்மா என்ற ரோலை நிஜ வாழ்க்கையிலும் சினிமாவிலும் வெளிப்படுத்துவது ஒரு உணர்வு பூர்வமான விஷயம் என்று அதில் பதிவிட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து இவர் நடிக்கும் இந்த குறும்படம் வெற்றி பெற வேண்டும் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.