விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். அந்த நிகழ்ச்சியில் நடுவராக இருப்பவர் தான் பாடகர் மனோ. தென்னிந்திய திரை உலகில் பாடகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் மனோ. இவர் பாடகராக மட்டுமல்லாமல் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் போன்ற பழமொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். பிரபு நடிப்பில் வெளியான சின்னத்தம்பி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற தூளியிலே ஆட வந்த பாடலுக்காக மனோ தமிழ்நாடு அரசு விருதையும் பெற்றுள்ளார்.

ஆரம்பத்தில் மேடை நாடகங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர். இதுவரை இவர் ஐம்பதாயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடி இருக்கிறார். 3000 மேடை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். இவர் மக்கள் மத்தியில் பிரபலமானது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தான்.

இதில் இவர் எஸ் பி பாலசுப்பிரமணியத்துடன் செய்யுமா அட்டகாசம் எல்லாம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பாடகர் மட்டுமல்லாமல் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் டப்பிங் கலைஞர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வந்து கொண்டிருக்கிறார் மனோ.

இதனிடையே மனோவின் அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் அவரும் அவரின் மகளும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகிய நிலையில், இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் மனோவிற்கு இப்படி ஒரு அழகான மகள் இருக்கிறாரா என்று ஆச்சரியத்துடன் கமாண்ட் செய்து வருகிறார்கள்.