திருமணம் முடிந்த கையோடு விஜய் டிவி புகழ் போட்ட முதல் பதிவு…. இணையத்தில் வைரலாகும் ட்விட்….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர்தான் புகழ். அந்நிகழ்ச்சியில் ஒரு சில நாட்கள் மட்டுமே இருந்து வெளியேறிய இவர் அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இருந்தாலும் விஜய் டிவி கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.

அந்த நிகழ்ச்சியில் இவர் செய்யும் காமெடிகளுக்கு அளவே இல்லை. அந்நிகழ்ச்சியை தொடங்க இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது சபாபதி, வலிமை, யானை மற்றும் என்ன சொல்லப் போகிறாய் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சில பட வாய்ப்புகளும் இவர் கைவசம் வைத்துள்ளார். அது மட்டுமல்லாமல் Zoo கீப்பர் எனும் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாக உள்ளார்.

இந்நிலையில் அவரின் நீண்ட நாள் காதலியை நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டார்.இதனைத் தொடர்ந்து புதுமண தம்பதிகளுக்கு பலரும் திருமண வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். தற்போது புகழ் அவரின் சமூக வலைதள பக்கத்தில் திருமணம் குறித்து முதல் முறையாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், திரையுலக மற்றும் தொலைக்காட்சி நண்பர்கள், ஊடக நண்பர்கள், உறவினர்கள், நலம் விரும்பிகள் மற்றும் என் உயர்வுக்கு ஏணியா இருந்து உதவும் என் உயிர் ரசிகர் பெருமக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் நிகழ்ச்சியும் மகிழ்ச்சியும் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.