பிரதமர் மோடி குறித்து பேசிய சமந்தா….. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய வீடியோ…. பின்னணி என்ன….????

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாக சைதன் யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த பிறகு சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு அவர் டான்ஸ் ஆடி இருந்ததற்கு பெரிய வரவேற்பு கிடைத்ததால் தற்போது இந்தியிலும் மிகப் பிரபலமான நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் இந்திய அளவில் டாப் நடிகைகளின் பட்டியலில் சமந்தா முதலிடத்தை பிடித்து வருகின்றார். இவர் தற்போது யசோதா மற்றும் சகுந்தலா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். இந்தியில் ஒரு வெப் சீரிஸில் நடிக்கின்றார். இதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். இதனிடையே சமந்தாவின் பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் சமந்தா, நான் எப்போதும் மோடியின் ஆதரவாளர்,அவரின் செயல்பாடுகளை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் மற்றொரு வீடியோவில் மோடி பிரதமராக பொறுப்பேற்றதற்கு பிறகு நாட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

நம்முடைய நாட்டை முன்னோக்கி கொண்டு செல்கிறார் என்று சமந்தா பேசியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த வீடியோ கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்றும் அப்போது நடிகை சமந்தா தூய்மை இந்தியா திட்டத்தை ஆதரித்து குப்பைகளை சுத்தம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் பரவியது குறிப்பிடத்தக்கது.